மன்னார் மாவட்டத்தில் வாழ்கின்ற 40 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
இன்றைய நாளிலும் (13.10.2021) “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் மூலம் மன்னார் மாவட்டத்தில் பரப்புக்கடந்தான் மற்றும் பாலைக்குளி கிராமசேவையாளர் பிரிவுகளில் வறுமை நிலையில் வாழ்கின்ற 40 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிதி உதவியினை நெதர்லாந்து தேசத்தில் வாழ்கின்ற லோரன்ஸ் அரியசீலன் அவர்கள் அமரத்துவடைந்த, யாழ்ப்பாணம் ராஜேந்திரா வீதியை சேர்ந்த தனது சகோதரி புஷ்பராணி குணபாலராஜா அவர்களின் 3️⃣1️⃣ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிவைத்தார்.
இவ் உதவியினை உரியவர்களிடம் எமது நிறுவனத்தின் செயலாளர் சகோதரன் பிரவீன் கொண்டு சேர்ந்துள்ளார்.
இவ் உதவியினை செய்த குடும்பத்தினருக்கு மக்கள் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
Email – info@jeevaootru.org
Web – jeevaootru.org