ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 25 ஆவது இல்லம் வழங்கப்பட்டுள்ளது
ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 25 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 11 ஆவது இல்லமும் இன்றைய நாளிலும் (20.08.2021) வவுனியா மாவட்டத்தில் கணேசபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான நிதியினை பிரித்தானியாவில் வாழ்கின்றவரான மக்கள் நல் வாழ்வு மையத்தின் செயலாளர் கந்தையா சங்கநிதி அவர்கள், அமரத்துவம் அடைந்த தனது தாயார் கந்தையா சரஸ்வதி அவர்களின் நினைவாக வழங்கியிருந்தார்.
இவ் இல்லத்தினை , பெறுநரிடம் “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பின் நிருவாக உறுப்பினர் சகோதரன் சுந்தர் மற்றும் வவுனியா மாவட்ட பணியாளர் சகோதரன் ராஜன் ஆகியோர் கையளித்துள்ளனர்.
சகல விதத்திலும் நிதி உதவியை வழங்கிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org