இன்றைய நாளில் கிளிநொச்சி கோணாவில்பகுதியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் கிளிநொச்சி கோணாவில்பகுதியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு நிவாரண பொதிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை கனடாவில் உள்ள தமிழ்செல்வன் அண்ணன் , லண்டனில் உள்ள சங்கநிதி அண்ணன், நியுசிலாந்தில் உள்ள முருகன் அண்ணன் ஆகியோர் வழங்கியிருந்தார்கள்.
தற்போதைய நிலையில் தாயக மண்ணில் பல உறவுகள் உதவிகளை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
உங்களது மகிழ்ச்சியான தருணங்களை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எமது பணியாளர்கள் எந்த பகுதியிலும் சேவை செய்ய தயாராக இருக்கிறார்கள்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் பல பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.