யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புத்தூர் சிறி சோமஸ்கந்தா கல்லூரியில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது
மக்கள் நல்வாழ்வு மையம் மற்றும் ஆவரங்கால் ஒன்றியம்,
ஜீவ ஊற்று அன்பின் கரம் , கமலா அறக்கட்டளை – Swiss, Mission Mail – Netharland, ஆகிய நிறுவனங்கள் இணைந்து இருபத்திரண்டு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.
இன்றைய நாளில் (14.01.2020) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புத்தூர் சிறி சோமஸ்கந்தா கல்லூரியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட மாணவர்கள் புத்தூர், வாதரவத்தை, அச்செழு, நீர்வேலி, சிறுப்பிட்டி, அராலி ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள்.
அத்துடன் பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்து பயணம் செய்பவர்கள்.
நிகழ்வுகளை மக்கள் நல்வாழ்வு மையத்தின் தலைவர் k. சர்வேஸ்வரன், செயலாளர் சுந்தரசெல்வன் ஆகியோர் ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்தனர்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக பொருளாளர் ஜெஸ்மன் மற்றும் யாழ் மாவட்ட பணியாளர்கள் சகோதரன் அன்ட்றூ, சகோதரன் சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் மேலும் எமது பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள். .