கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (19.12.2020)
கிளிநொச்சி மாவட்டத்தில் உதயநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட பெண் யுத்த காலத்தில் கை கால்களில் பாதிப்பை எதிர்கொண்டு அன்றாடம் வாழ்க்கை சுமையுடன் போராடிக் கொண்டிருந்தவர். அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த இந்த உதவி வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக வழங்கப்பட்ட இந்த உதவிக்கு Netherland Mission Mail நிறுவனத்தினர்நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
எமது ஜீவ ஊற்று அன்பின் கரம் பொருளாளர் ஜஸ்மன் தலைமையில் ஏனைய மாவட்ட பணியாளர்களும் இதனை ஒருங்கமைப்பு செய்து வழங்கியிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் குறிப்பிட்ட சகோதரி தேவையான ORDER களை பெற்று கொள்ள நீங்களும் இந்த பதிவினை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.