மன்னார் மாவட்டத்தில் நான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் முழங்காவில் மற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.
பாடசாலைக்கு நடந்து சென்று அவதிப்படும் மாணவர்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை Mission mail Netherland நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்த உதவி செயற்திட்டத்தை ஜீவ ஊற்று அன்பின் கரம் மன்னார் மாவட்ட இணைப்பாளர் தமிழ்செல்வன் ஒழுங்கு படுத்தியிருந்தார். நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜஸ்மன் ஆகியோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.