நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் மூன்றாம் பிட்டி பகுதியை சேர்ந்த நூறு குடும்பத்தினருக்கு உலர் உணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
புரைவி புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்றாட தொழில் வாய்ப்புகளை இழந்த மக்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை மக்களுக்கு உதவும் மக்கள் மன்றம் மற்றும் Glory Mission Church – Germany இணைந்து வழங்கினர்.
இந்த உதவி செயற்திட்டத்தை ஜீவ ஊற்று அன்பின் கரம் மன்னார் மாவட்ட இணைப்பாளர் தமிழ்செல்வன் ஒழுங்கு படுத்தியிருந்தார். நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரம் செயலாளர் பிரவீண் மற்றும் பொருளாளர் ஜஸ்மன் ஆகியோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.