நாவற்குழி பகுதியைச் சேர்ந்த ஐம்பது பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த ஐம்பது பாடசாலை மாணவர்களுக்கு கொப்பிகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
லண்டன் தேசத்தில் வசிக்கும் திரு திருமதி செல்வா றூபா தம்பதியினரின் நாப்பதாவது திருமண ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.
அம்மா றூபா அவர்கள் ஜீவ ஊற்று அன்பின் கரம் லண்டன் இணைப்பாளர் என்பதுடன் ஆரம்பத்தில் இருந்தே எம்முடன் பயணிக்கும் அங்கத்தினரில் ஒருவராவார்.
இதனை ஜீவ ஊற்று அன்பின் கரம் தென்மராட்சி பணியாளர் சகோதரன் அன்ட்றூ ஒழுங்கமைத்து வழங்கியிருந்தார்.
அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடே தம்பதியினருக்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பான மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊற்று அன்பின் கரம்
இன்றைய தினம் ஜீவ ஊற்று அன்பின் கரமும் மக்கள் நல்வாழ்வு மையம் அமைப்பினரும் இனைந்து கிளிநொச்சி, பண்ணங்கண்டி பகுதியில்65 பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.
இதனை Tubetamil தமிழ்க்கொடி அமைப்பினர் உரியவர்களிடம் கொண்டு சேர்ந்திருந்தனர்.