அன்பின் கரம் வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோழி கூடு ஒன்று அமைக்கப்பட்டு ஐம்பது கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அடிச்சுவடுகளை திரும்பி பார்க்கிறோம்…. அகவைகள் ஆறை கடக்க செய்த ஆண்டவருக்கு நன்றி சொல்கிறோம்.
ஏழாம் ஆண்டுக்குள் காலடி வைக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தொடர் பணியின் மற்றுமோர் பகுதி உங்கள் பார்வைக்கு
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளில் (31.08.2020) யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவத்தை உடைய குடும்பம் ஒன்றிற்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் வாழ்வாதார திட்டத்தின் கீழ் கோழி கூடு ஒன்று அமைக்கப்பட்டு ஐம்பது கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் பொருளாளர் சகோதரர் ஜஸ்மன் மற்றும் தென்மராட்சி இணைப்பாளர் போதகர் அன்ட்றூ அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிதி உதவியை #லண்டன் தேசத்தில் உள்ள காக்கும் கரங்கள் அமைப்பு மற்றும் சகோதரி #தீபா அவர்கள் இணைந்து வழங்கியிருந்தனர்
ஜீவ ஊற்று அன்பின் கரம் தனது ஆறாவது ஆண்டை நிறைவு செய்து ஏழாவது ஆண்டிற்குள் காலடி பதிக்கும் நாட்கள் நெருங்கி இருப்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
அதிகமான உதவிகளை எதிர்பார்த்து தாயக உறவுகள் இருப்பதால் நீங்களும் எம்முடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு
T-JEJEEVAN
www.jeevaootru.org
+32465999897
Belgium 🇧🇪