ஜீவஊற்று அன்பின் ௧ரம் வீடு கையளிப்பு ஜீவஊற்று அன்பின் இல்லம் 13
ஜீவஊற்றுஅன்பின் கரத்தினூடாக கடந்த சனிக்கிழமை (11.07.2020) அன்று வவுனியா ஓமந்தை பகுதியில் நிரந்தர வீடு இல்லாமல் மழை காலங்களில் பல அசோகரியங்களை எதிர் நோக்கிய குடும்பம் ஒன்றிற்கு வீடு அமைத்து அவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 13 ஆவது அன்பின் இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 4 ஆவது இல்லமும் ஆகும்.
நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தினுடைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு மையம் அமைப்பினருடைய இலங்கைக்கான நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வீடு அமைப்பதற்கான நிதி வழங்கிய மக்கள் நல்வாழ்வு மையம் அமைப்பினர் அத்தோடு அவ் அமைப்பின் ஸ்தாபகர் முருகானந்தன் (நியூசிலாந்து) அவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
விரும்பினால் நீங்களும் இவ் உன்னத பணியில் எம்மோடு இணைந்து கொள்ள முடியும்