யாழ்ப்பாணம் திருகோணமலை கிளிநொச்சி மாவட்டங்களிலும் நிவாரண உதவிகள்
Coronavirus தாக்கத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்களுடைய வாழ்வை கொண்டு நடத்தும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக கிளிநொச்சி உதயநகர் கிழக்கு, உதயநகர் மேற்கு, சாந்தபுரம், மலையாள புரம் பகுதிகளில் இந் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கும், திருகோணமலையில் மூதூர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இந்த.த நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள வேளையிலும் வீடு வீடாக சென்று எமது நிறுவன பணியாளர்களால் இவ் உதவிகள் வழங்கப்பட்டது.
இவற்றுக்கான நிதி உதவியை AUSTRALIA IMAGINE COMPASSION INTERNATIONAL
LTD [ICI]
நிறுவனத்தினர் செய்திருந்தனர்
இவ்வாறு இன்னமும் ஏராளமான எமது உறவுகள் பல இன்னல்களை எதிர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். விரும்பினால் நீங்களும் இவ் உன்னத பணியில் இணைந்து கொள்ள முடியும்.