மட்டக்களப்பில் ஓர் குடும்பத்தினருக்கு வீட்டு பொருட்கள் வழங்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (20.11.2019) மட்டக்களப்பு கல்லடி நாவலடி பகுதியை சேர்ந்த ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு உணவு பொருட்கள், வீட்டு தளபாடங்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளடங்கலாக ரூபா 45000 பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் மின்சாரத்திற்கான பணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்ட மின்சாரமும் பணம் செலுத்தி மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றாட உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல இன்னல்களை அனுபவித்து வந்த இவர்களுக்கு இவ் உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இவ் உதவி சுவிற்சர்லாந்து தேசத்தில் வாழும் சகோதரர் யோகன் குடும்பம் மற்றும் சகோதரர்களான ஆதுசன் , ஆகிசன் ஆகியோர் இதற்கு தேவையான நிதி உதவியை வழங்கியதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
சமூக வலைத்தளம் மூலம் இவர்களது நிலை கண்டு விரைந்து செயற்பட்ட எமது நிர்வாகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வுதவியை உரியவர்களிடம் கொண்டு சேர்த்த மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சகோதரர் திலிப்புக்கும் மற்றும் சகோதரர் மோகனுக்கும் நன்றிகள்.
அத்தோடு இவர்களுக்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதனால் அந்த உதவியை செய்ய விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும் அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்து தருவோம்.
தேவன் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!