நான்கு குடும்பங்களுக்கு குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (08.11.2019) மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இக் குடும்பத்தினர்கள் பணத்தினை செலுத்த முடியாமல் பல இன்னல்களை எதிர் நோக்கிய போது ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக அமெரிக்காவில் உள்ள ஜோன் ஜோகேந்திரா குடும்பம் இதற்கு தேவையான பண உதவியை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 11,385 ரூபாய் வீதம் வழங்கி குடிநீரைப் பெற்றுக்கொள்ள உதவி செய்ய முன் வந்தனர்.
இவ் உதவி தொகை மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பிரதேச செயலாளர் Mrs. R.Rakulanajaki ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
எமது நிர்வாகத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சகோதரன் திலிப் அவர்களும் அவருடன் இணைந்து சகோதரன் மோகன் அவர்களும் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.
நீங்களும் இவ்வாறான உதவிகளை செய்ய விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த காரியங்களுக்கு உதவி செய்த குடும்பத்தினரையும், உதவிகள் பெற்ற சகோதரர்களையும், எமது நிர்வாக உதவியாளர்களையும் தேவன் தாமே நா