5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொடிகாமம் பகுதியில் நிவாரணம் வழங்கபட்டது
ஜீவஊற்றுஅன்பின்கரம் அறம் அறக்கட்டளை 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய நாளில் (01.09.2019) கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் இருபது குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டது.
பேரொளி தேவாலயத்தில் ஆராதிக்கும் ஓர் குறிப்பிட்டவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. ஜீவ ஊற்று அன்பின் கரம் நியூசிலாந்து இணைப்பாளர் அவரது மனைவியுடன் கலந்து நேரடியாக பொதிகளை வழங்கினார். அத்தோடு அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்காக ஜெப விண்ணப்பங்களை ஏறடுத்தனர்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒவ்வொருவரும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்த குறிப்பிட்ட உதவியை வழங்கிய குடும்பத்தினரையும் இவற்றை ஒழுங்கமைப்பு செய்த சகோதரர்களையும் அத்துடன் நியூசிலாந்து தேசத்தில் இருந்து கலந்து சிறப்பித்த அன்பு சகோதரர்களையும் தேவன் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!
அடுத்த புதிய ஆண்டுக்குள் நுழைந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் இது போன்ற இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை தராதரத்தினை உயர்த்த உங்களையும் அன்புடன் அழைக்கின்றது. எம்முடன் இணைந்து நீங்களும் பயணிக்க ஓர் அருமையான சந்தர்ப்பம். விரும்புகின்றவர்கள் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும்.