பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் 32 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக, கடந்த 27.05.2019 அன்றைய தினம் லண்டனில் வசிக்கும் திரு திருமதி பாஸ்கரன் அவர்களின் மகன்களான அனிஸ்,அஜி ஆகிய இருவரின் பிறந்த நாளை முன்னிட்டு
கணேஸ்சபுரம், இந்தியன் வீட்டுத் திட்டம், வெள்ளாங்குளம், மன்னார் பகுதியில் 32 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை தாய் மண்ணில் தவிக்கும்
ஏழைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இது உங்கள் சந்ததிக்கும் ஆசீர்வாதமாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நீங்கள் விரும்பினால் நாங்கள் ஆயத்தமாக உள்ளோம் எம் உறவுகளை வாழ வைக்க.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!