ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா முல்லைத்தீவில் நடைபெற்றது
16.09.2024 திங்கட்கிழமை நடைபெற்ற ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு , முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களது தலைமை காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் அரசு சார்பற்ற நிறுவனத்தினர் ஜீவ ஊற்று அறப்பணியாளர்கள் என்று பலர் ஒன்று கூடி நிகழ்வை சிறப்பித்தனர்.
அந்த வகையில் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மதிப்பார்ந்த திரு சண்முகநாதன் ஐயா அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திரு பவானந்தன், திருமதி சபிதா ஆகியோரும், நெதர்லாந்து தேசத்திலிருந்து வருகை தந்திருக்கும் நன்கொடையாளர்கள் ஜெயந்தன் ஜென்சியா,மற்றும் நியூசிலாந்து தேசத்திலிருந்து வருகை தந்திருக்கும் ஜீவ ஊற்று அறக்கட்டளை நிறுவனத்தின் செயற்பாட்டாளர் மதிப்பார்ந்த திரு ரவி அவர்களும் , மற்றும் நெதர்லாந்தில் இருந்து வருகை தந்திருக்கும் மதிப்பார்ந்த திரு லாரன்ஸ் அவர்களோடு ஜீவ ஊற்று நிறுவனத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் நிர்வாகத்தினர்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் பயனாளிகள் என்று பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபூர்வமாக தேசிய கொடி ஏற்றலோடு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில், தேசியக்கொடியை மதிப்பார்ந்த உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு சண்முகநாதன் ஐயா அவர்கள் ஏற்றி வைக்க, ஜீவ ஊற்று நிறுவனத்தின் கொடியினை நிறுவனத்தின் தலைவர் ஜோன் தயாளினி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் பயனாளிகள் அனைவரும் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு ஜீவ ஊற்று அன்பின் கரங்களின் 10 ஆண்டுகள் செயற்றிட்டம் காணொளியாக காட்சிப்படுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் அறக்கட்டளை நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் அந்த காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டதோடு பலதரப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது.
பிரதானமாக இந்த நிகழ்வில் ஜீவ ஊற்று நிறுவனத்தின் தொழில் பயிற்சி கூடத்தில் தையல் தொழில் பயிற்சியினை பெற்றுக் கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. பசித்தவனுக்கு மீனைப் பிடிக்க கற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளில் இந்த தொழில் பயிற்சி குடும்பம் பிரதான ஒரு நிகழ்வாக விளங்குகின்றது.
விருந்தினர்களது கருத்துரைகள் உபசரிப்புகளோடு நிறைவு பெற்ற ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வு வரலாற்றில் பல அத்தியாயங்களை எழுதிச் செல்லும் என்பதில் இந்த ஐயமும் இல்லை.
மக்களோடு பயணிப்போம் …
மக்களுக்காக பயணிப்போம்…