பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கல்
வே.பாலவினாயகமூர்த்தி மற்றும் பா.பாலயோகமணி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்கின்ற இந்த மழைக்காலத்தில் வேலை வாய்ப்புகள் இன்றி, அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் குழந்தைகளின் பசியை போக்குவதற்கும் அவதிப்படுகின்ற மக்களுக்கு இந்த உலர் உணவுப்பொதிகள் மிகவும் அத்தியாவசியமாக காணப்படுகின்றது. இக்கட்டான இந்த காலத்திலே தமது பிறந்த நாளை முன்னிட்டு எமக்கு உலர் உணவு பொதிகளை வழங்கிய வே.பாலவினாயகமூர்த்தி மற்றும் பா.பாலயோகமணி அவர்களுக்கு நமது ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினதும் பயனாளிகள் சார்பிலும் நமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.