யாழ் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் 156 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கப்பட்டமை
அநேக வருடங்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்த உறவிற்கு உதயமாகிறது அன்பின் இல்லம்.
இவ் ஆண்டு இறுதி மாதத்தில் முதல் நாளில் (01.12.2024) ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் புதிய இல்லத்தை நிர்மாணித்து கொடுப்பதற்காக அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 156 ஆவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதி உதவியை இலண்டனில் வசிக்கும் ஷேம் அண்ணா வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .
இந்த இல்லமானது யாழ் சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.