திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை
திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி அவரது வாழ்வாதாரத்திற்கு வலுச் சேர்த்து இருக்கின்றனர் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தினர்.
இவரது வாழ்வாதாரத்துக்கான நிதியினை லண்டனில் இருக்கும் பாபு மற்றும் மதி அவர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதனுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நம்மோடு தங்கள் கரங்களை இணைத்துக் கொண்ட நன்கொடையாளர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.