முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன
மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில், நான்காவது தொழிற்பயிற்சி அணியினர் தமது தையல் பயிற்சியினை மிகவும் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
ஏற்கனவே போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ,மக்கள் தமது தற்சார்பு வாழ்வியலை மேம்படுத்தும் பொருட்டு, வழங்கப்படுகின்ற தொழில் சார் பயிற்சி நெறிகள் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தொழில் பயிலுனர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குகின்ற மிஷன் மெயில் நிறுவனத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் பயனாளிகள் சார்பில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.