யாழ் மாவட்டத்தில் 121 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது
10 ஆண்டுகளை நிறைவு செய்து 11 ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது பல்வேறான மனிதநேயமிக்க பணிகளையாற்றுகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கடந்த 16.09.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 121 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது யாழ் மாவட்டத்தில் பண்டத்தெருப்பு பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை Netherland ASSEN பட்டணத்தில் வாழ்கின்ற அன்பு சகோதரி Jeyanthan Janzjaya வழங்கியுள்ளார்கள். சகோதரி மட்டுமன்றி சகோதரியின் சகோதரர்கள Theogu Jesuthasan Theogu Marianayagam ஆகியோரும் கைகோர்த்து இவ் இல்லத்தை நிர்மாணித்து வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய அன்பு உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.