முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை
நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளலாம்…
இலங்கையில் இப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டிருக்கிறது.
ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு இந்த மழை காலம் அவர்களது வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது. குழந்தைகளோடு குடியிருப்பதற்கு வீடு இன்றி தவிக்கின்ற மக்கள் ஒரு புறம், அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு பசித்த வயிற்றுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கின்ற மக்கள் மறுபுறம் என்று மக்கள் தற்போது அவதியுற்று வருகின்றனர். ஏற்கனவே கூலி தொழில்களையும் கட்டுமான தொழில்களையும் செய்து கொண்டிருந்த பலருக்கு மழைக்காலம் வேலைவாய்ப்பை பறித்து கொண்டிருக்கிறது .
இந்த மழை காலம் முடிவுக்கு வரும் வரை அவர்கள் தமது பசித்த வயிற்றுக்கு உணவளிப்பதற்கு பல வகையான துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. இந்தப் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்த ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனம், லண்டன் வாழ் உறவு சகோதரன் மதி ஊடாக 50 வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நிவாரண உலர் உணவு பொதிகளை வழங்கி இருக்கிறது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பிரதேசத்தில் உள்ள தாமரை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் 25 பேருக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது .
தொடர்ச்சியாக வறுமை கோட்டுக்கு உட்பட்ட இந்த மக்களின் பசியை போக்கும் பொருட்டு ஜீவ ஊற்று நிறுவனத்தோடு கைகோர்த்து நிவாரண பணிகளை செய்ய விரும்புபவர்களை பேரன்போடு வரவேற்கிறோம்.
ஜீவ ஊற்று அன்பின் கரம்,
முல்லைத்தீவு ,
இலங்கை.