ஜீவஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணியின் நிறைவு விழா
மிஷன் மெயில் நிறுவனத்தினரின் முழுமையான நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் நடாத்தும் தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணி வெற்றிகரமாக வெளியேறி இருக்கிறது. அவர்கள் தொழிற்பயிற்சியின் போது உருவாக்கிய ஆடைகள் அனைத்தும் மக்களது கண்காட்சிக்கு வைக்கப்பட்டு தற்சார்பு வாழ்வியலை மேம்படுத்தக்கூடிய தொழில் வாய்ப்போடும் தொழிற்பயிற்சியோடும் வெற்றிகரமாக ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் மூன்றாவது தொழில் பயிற்சி அணியினர் வெளியேறி இருப்பது மக்களிடையே மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.
தொழிற்பயிற்சி மாத்திரமன்றி தொழில் வாய்ப்பையும் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஜீவ ஊற்று நிறுவனம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிராமங்கள் தோறும் இவ்வாறான தொழில் பயிற்சி நிறுவனங்களும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் அமைக்கப் பெற்றால் அந்த கிராமம் வறுமையிலிருந்து மீளும் வாய்ப்புகள் ஏற்படும். இப்படி பல்வேறு கிராமங்களுக்கு ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் முன்மாதிரியாக இருக்கின்றது.