ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்
முல்லை தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வரும் எமது நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வு மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்விலே வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சண்மமுகநாதன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு பவனந்தன் திருமதி சபிதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்விலே ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் நன்கொடையாளர்கள், பயனாளிகள் பொதுமக்கள் மற்றும் நிறுவனத்தின் அறப் பணியாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 10 வருடங்களாக ஜீவ ஊற்று நிறுவனத்தின் பணிகளில் அயராது உழைத்த அறப்பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டதோடு, விருந்தினர்கள் மற்றும் அறப்பணியாளர்களுக்கான பரிசில்களையும் நிறுவனத்தின் தலைவர் திருமதி ஜோன் தயாளினி அவர்கள் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய mission mail மற்றும் SQM foundation நிறுவனத்தினர் மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் மற்றும் அறப்பணியாளர்களுக்கும் நன்றிகளையும் பேரன்பையும் தெரிவித்தார் நிறுவனத்தின் இயக்குனர் ஜெஜீவன் அவர்கள்.