மட்டக்களப்பு தேற்றாத்தீவுப் பகுதியில் 144 இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்போடு கை கோர்த்து சேவையாற்ற ஆரம்பித்துள்ளது RJ Tamizha YouTube Channel.
அந்த வகையில் மட்டக்களப்பு தேற்றாத்தீவுப் பகுதியில் வீடற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த விசேட தேவையுடைய அங்கத்தவரைக் கொண்ட குடும்பத்திற்கு நிரந்தர இல்லம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் கடந்த 13.06.2024 அன்று வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 144 இல்லமும் RJ Tamizha இனது 01 ஆவது இல்லமும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லத்தை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை கனடா தேசத்தில் வாழ்கின்றதான வடிவேலு அன்னலெட்சுமி குடும்பத்தினர் வழங்கி உள்ளனர் அன்பு உறவுகளிற்கிகு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி