யாழ்ப்பாணத்தில் 142 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்போடு கை கோர்த்து சேவையாற்ற ஆரம்பித்துள்ளது SK VLOG YouTube Channel
அந்த வகையில் யாழ் இணுவில் பகுதியில் வீடற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வந்த விசேட தேவையுடைய அங்கத்தவரைக் கொண்ட குடும்பத்திற்கு நிரந்தர இல்லம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் கடந்த 02.06.2024 அன்று வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 142 ஆவது இல்லமும் SK VLOG இனது 01 ஆவது இல்லமும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லத்தை நிர்மாணிப்பதற்கு சகோதரன் கிருஷ்ணா மூலம் (Sk VLOG YouTuber) நிதி உதவி வழங்கிய அன்பு உறவிற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி