மட்டக்களப்பு மாவட்டதிலே பொது விளையாட்டரங்கு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமை
மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகர் தேற்றாத்தீவில் SPM குடும்ப புகழ்பாட உதயமாகிறது வெற்றிவிநாயகர் பொது விளையாட்டரங்கு.
அகவை ஐம்பதை நினைவுகூறும் அண்ணன் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஐம்பதானாலும் என்ன ? எண்பதானாலும் என்ன? இப்பூமியில் உயிரோடு வாழும் வரை எம் உறவுகளை வாழ வைப்பேன் எனும் அசையா உணர்வோடு தனது ஐம்பதாவது பிறந்த தினத்திலும் மேற்கொண்ட பல்வேறு பணிகளில் ஒன்றாக விளையாட்டு மைதான அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
அந்தவகையில் கடந்த 19.03.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM Foundation Canada இனது நிதி உதவியில் விளையாட்டு மைதான அரங்கினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லினை வைத்துள்ளது.
இவ் விளையாட்டரங்கானது மட்டக்களப்பு தேற்றாத்தீவு கிராமத்தில் அமையப்பெறவுள்ளது. இவ்வரங்கின் மூலம் பாடசாலை மாணவர்கள், விளையாட்டுக் கழகங்கள் பயன்பெறவுள்ளன.
இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
இவ் இனிதான நிகழ்வில் SPM குடும்ப உறவுகள் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.
விசேடமாக கமலநாதன் (கண்ணன்) அண்ணனின் தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன்) கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சேவை எனும் விதை இரத்தத்திலே விதைக்கப்படடுள்ளது அதுதான் என்னவோ SPM புகழோங்க எங்கள் கண்ணன் அண்ணன் இடையுறா சேவை நல்கியவண்ணம் உள்ளார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .
அன்பின் பிறந்தநாள் நல் வாழ்த்துகள் அண்ணா. God Bless You.
_நன்றி_
_JEEVAOOTRU trust_
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo