வவுனியா மாவட்டத்தில் 112 ஆவது இல்லத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது
புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும் மக்களை பெருமைப்படுத்தி வாழவைக்கவே பிரதேச வேறுபாடுகளை களைந்து இதுவரையில் தன் சொந்த நிதியில் 18 இல்லங்களை நிர்மாணிப்பதற்கான உதவியினை நல்கியவரின் உன்னதமிக்க பங்களிப்பில் இன்றைய நாளிலும் (16.03.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 112 ஆவது இல்லமும் அதே சமயம் SQM JANITORIAL SERVICES INC and SQM FOUNDATION CANADA இனது 19 ஆவது இல்லத்திற்குமான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது வவுனியா மாவட்டத்தில் பொன்னாவரசன்குளம் எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர் கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார். கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
_JEEVAOOTRU trust_
Email_info@jeevaootru.org
Web_jeevaootru.or