மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 ஆவது இல்லத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவஊற்று அன்பின்கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (15.04.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 116 ஆவது இல்லமும் அதேவேளை சகோதரன் நவநீதனின் 4 ஆவது இல்லத்திற்குமான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோப்பாவெளி பகுதியில் உள்ளதான தும்பாலன்சோலை எனும் குக்கிராமத்தில் கடந்த நாட்களில் காட்டு யானையின் தாக்குதலினால் வீட்டினை முற்றாக இழந்து உயிர்தப்பிய தாய் மற்றும் மகளுக்கே (கணவனால் கைவிடப்பட்ட தாய்) வழங்கப்படவுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை சுவிற்சர்லாந்தில் வாழ்கின்றதான சகோதரன் நவநீதன் வழங்கியுள்ளார். இவ் மகத்தான உதவியினை நல்கிய நீதன் அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
_JEEVAOOTRU trust_
help@jeevaootru.ng