கிளிநொச்சியில் 123 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கின்ற நிகழ்வு நடைபெற்றமை
உதயமாகிறது அன்பின் இல்லம் கிளிநொச்சி பகுதியில் “எம் உறவுகளை வாழவைப்போம்” என்பதற்கமைய ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 123 ஆவது இல்லத்திற்கான அடிக்கல் வைக்கின்ற நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது எனும் மகிழ்வின் செய்தியை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றோம்.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியை வருகின்ற மாதம் இல்லற வாழ்வில் இணையவுள்ள பிரியன் சுவேதா வழங்கியுள்ளார்கள். குறிப்பாக சகோதரன் பிரியன் வழங்கும் நான்காவது இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.