திருகோணமலை மாவட்டத்தில் 137 ஆவது இல்ல அடிக்கல் வைக்கப்பட்டது
பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் 11.02.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 137 ஆவது இல்லமும் PLEDGE TO RESTORE FOUNDATION இனது 4 ஆவது இல்லத்திற்குமான அடிக்கல் வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்னைமரவாடி பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்படவுள்ளது.
இம் மகத்தான சேவைக்கான நிதி உதவியை அவுஸ்திரேலிய மற்றும் இலங்கையில் செயற்படுகின்ற PLEDGE TO RESTOREFOUNDATION இனது ஸ்தாபகர் வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய *ஸ்தாபகருக்கு* எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
_*JEEVAOOTRU trust*_
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo