மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டமை
எம் உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம் தேசத்தில் அல்லலுறும் மக்களின் அல்லலை ஒழிக்கவென ஓயாது ஓடுகின்ற ஜீவ ஊற்று அன்பின் கரம் தன்னால் முடிந்த பணியினை மனித நேயமிக்க உள்ளங்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் இப்புத்தாண்டு தினமதிலும் தன்னுடைய உன்னதமிக்க சேவையின் பலனாக புதிய இல்லம் மற்றும் மலசலகூடம் என்பவற்றை நிர்மாணித்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்குவதையிட்டு மட்டற்ற மகிழ்வடைகின்றோம்.
அந்த வகையில் இன்றைய நாளிலும் (01.01.2024) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 97 ஆவது இல்லமும் அதே சமயம் மட்டுநகரைச் சேர்ந்ததும் தற்போது சுவிஸ் தேசத்தில் வசிக்கின்றதுமான நவநாதன் நவநீதன் சொந்த நிதியில் நிர்மாணிக்கின்ற 2 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு பிரதேசத்திற்குட்பட்ட நரிபுல்தோட்டம் எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை நவநாதன் நவநீதன் அவர்கள் அமரத்துவமடைந்த தன் சகோதரன் நவநாதன் யசோதன் ( பங்கஜன்) நினைவாக வழங்கியிருந்தார்.
சகோதரன் நவநாதன் நவநீதன் அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
#JEEVAOOTRU _trust
http://www.jeevaootru.ngo
help@jeevaootru.ng