முல்லைத்தீவு மாவட்டத்தில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டமை
இன்றைய நாளில் (13.12.2023) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவனைக் கொண்ட குடும்ப உறவுகளை வாழ வைக்கும் உன்னத பணியினை எல்ஷடாய் பிறயர் மினிஸ்றியினரின் (சுவிற்சர்லாந்து) உன்னதமிக்க நிதிப்பங்களிப்பில் மேற்கொண்டுள்ளோம்.
இவ் உன்னதமிக்க பணியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இவ் வாழ்வாதார உதவியானது எமது அலுவலகத்தில் இடம்பெற்ற தையல் கலையினை கற்று தேர்ச்சி பெற்ற மாணவியின் குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
உதவி நல்கிய அன்பு உறவிற்கு எம் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துகக்கொள்கின்றோம்.