ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 107ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (28.10.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 107 ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்மானது முல்லைத்தீவு மாவட்டத்தில் புதூக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனும் கிராமத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் வாழ்கின்ற சாந்தன் குடும்பம் ( சாந்தன், மரியம், ஏனோக் , நிகுயின்) மற்றும் ஜெசிந்தன் குடும்பம் ( ஜெசிந்தன்,றொஷாணி, ஆதி ) ஆகியோர் வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo