மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (09.10.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை அவுஸ்திரேலிய தேசத்தில் வாழ்கின்றதான சகோதரன் சிவப்பிரகாசம் காந்தன் வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்குவில் பகுதியில், பிரதேச செயலகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட குடும்ப உறவுகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இனிதான நிகழ்வில் மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேசசெயலகத்தைச் சேர்ந்த பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , அபிவிருத்தி உத்தியோக இணைப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.