கிளிநொச்சி மாவட்ட ஜெயப்புரத்தில் 100 வது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் வீடமைப்பின் பாதையில் வீடற்றவர்களுக்கு நிரந்தர வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதற்காக முதல் வீட்டினை சிறிதாக ஆரம்பித்து அடிமேல் அடிவைத்து மெதுவான நகர்வுகளுடன் சென்று கொண்டிருந்த போது “இனி உங்களால் நகரவே முடியாது” என்று பலர் கூறிய போதும், அவற்றை எல்லாம் எதிர்கொண்டு இன்று ஜெயப்புரம் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறாவது வீட்டை நிர்மாணித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறது ஜீவ ஊற்று அன்பின் கரம்
பல எதிர்ப்புகள் , சொல்லடிகள், அவப்பெயர்கள், இணையத்தள முடக்கங்கள் மற்றும் விசாரணைகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு
நூறாவது வீட்டின் திறப்பு விழாவை
கொண்டாட இருக்கின்றோம் நாம்.
பல்வேறு விதமான சவால்களை சந்தித்த ஜீவ ஊற்று அன்பின் கரமானது தன் இலக்கை மட்டும் என்றுமே கைவிடவே இல்லை.
சவால்களின் வழி வந்து சாதனை பெற்று இலங்கை முழுவதும் அடையாளப் படுத்தப்பட்டதன் வெற்றி தான் இந் நூறாவது வீட்டின் திறப்பு விழா
நாம் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி மலையகத்திலும் எம் பணியினை விஸ்தரித்துள்ளோம் என கூறுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றோம்.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இவ்வீட்டிற்கு
அனுசரணை வழங்கிய
நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்திருக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் செயற்பாட்டாளர் ரவி ரஜனி குடும்பம் மற்றும் ஜீவ ஊற்று நிறுவனத்தின் தலைவர் தயாளினி ஜோன்
செயலாளர் பிரவீன் பொருளாளர் ஜெஸ்மன்
மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.