கிளிநொச்சி மாவட்டத்தில் 103 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டமை
புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும் மக்களை பெருமைப்படுத்தி வாழவைக்கவே பிரதேச வேறுபாடுகளை களைந்து இதுவரையில் தன் சொந்த நிதியில் அநேக இல்லங்களை நிர்மாணிப்பதற்கான உதவியினை நல்கியவரின் உன்னதமிக்க பங்களிப்பில்
இன்றைய நாளிலும் (03.09.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 100 ஆவது இல்லமும் அதே சமயம் SQM JANITORIAL SERVICES INC
AND SQM FOUNDATION CANADA இனது 19 ஆவது இல்லமும் மற்றும் மலசலகூடம் என்பன பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் உதவியானது கிளிநொச்சி மாவட்டத்தில் காலை இழந்து ஆணுக்கு நிகராக நின்று குடும்பத்தை பல்வேறு இன்னல்களுடன் நடாத்தி வருகின்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர் தொழிலதிபர் கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார்.
கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இக் குடும்பத்திற்கு தேவையான வீடு,மலசலகூடம் மற்றும் குழாய்க்கிணறு என்பனவற்றை ஜீவ ஊற்று அன்பின்கரம் ஏற்படுத்தி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
_நன்றி_
http://www.jeevaootru.ngo
help@jeevaootru.ng