மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பல வருட பயணத்தில் பல்வேறு வகையான பணிகள். பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும் மக்களை பெருமைப்படுத்தி வாழ வைக்கவே பிரதேச வேறுபாடுகளை களைந்து தன் சொந்த நிதியில் அநேக இல்லங்களை நிர்மாணிப்பதற்கு ஆயத்த நிலையில் உள்ளவரின் உன்னதமிக்க பங்களிப்பில்.
இன்றைய நாளிலும் (18.06.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 96 ஆவது இல்லமும் அதே சமயம் நீதன் அண்ணாவின் 1 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்திற்குட்பட்ட சின்னவேம்பு எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை, அமரத்துவமடைந்த நவநாதன் யசோதன் (பங்கஜன்) நினைவாக அமரர் அவர்களின் சகோதரன் சுவிற்சர்லாந்தில் வாழ்கின்றதான நவநாதன் நவநீதன் வழங்கியிருந்தார்கள்.
நவநாதன் நவநீதன் அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விசேடமாக இந் நன் நிகழ்வில் நவநீதன் அண்ணாவின் தாய் தகப்பன் (சூர்யா லேன் மட்டுநகர்) வருகை தந்திருந்தனர்.
இவர்களுக்கும் எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
_நன்றி_
#JEEVAOOTRU _trust
http://www.jeevaootru.ngo
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo