முல்லைத்தீவு மாவட்டத்தில் தையல் பயிற்சி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டமை
ஜீவஊற்று அன்பின் கரம் அமைப்பின் மகத்தான ஆரம்பம்
பல்வேறு பணிகளை நாம் ஆற்றுகின்ற போதிலும் எம் உறவுகளை வாழ வைக்கின்ற உன்னதமிக்க சேவையை ஆற்றவுள்ளோம்.
அந்த வகையில் முதல்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தையல்கலையில் தேறினவர்களாக்குவதற்காகவும் இன்றைய நாளிலும் (16.06.2023 வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு எமது தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியானது தையற்கலையில் நிபுணத்துவமிக்கவர்களை கொண்டு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி நெறிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் நாம் வழங்குகின்றோம் .
இக் கற்கை நெறிக்கு ஜீவ ஊற்று அன்பின் கரத்தோடு கைகோர்த்து அனுசரனை வழங்குபவர்கள்
மிஷன் மெயில் _ நெதர்லாந்து
ரெகோபத் ஊழியங்கள்_ டென்மார்க்
அப்போஸ்தல திருச்சபை_ டென்மார்க்
நன்றி.