மன்னார் மாவட்டத்தில் 94 ஆவது இல்லம் வழங்கி வைக்கப்பட்டது
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.
விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (20.05.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 94 ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்திடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மன்னார் மாவட்டத்தில் ஈச்சலவக்கை எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவியினை யாழ்ப்பாணம் பளையில் வாழ்கின்றதான திரு.திருமதி பாலவினாயகமூர்த்தி , பாலயோகமணி அவர்களுடைய சுவிற்சர்லாந்தில் வாழ்கின்றதான மகள் பமீரா மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகிசன், ஆதுசன் ஆகியோர் வழங்கியுள்ளார்கள்.
இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
contact@jeevaootru.ngo
help@jeevaootru.ngo