மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 ஆவது இல்லம் பெறுனரிடம் வழங்கப்பட்டமை
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில்,
இன்றைய நாளிலும் (15.04.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 81 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 65 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மைலம்பாவெளி பகுதியில் கணவனற்ற நிலையில் பெண்பிள்ளையொன்றுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்தை நிர்மாணிப்பதற்காக சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழ்கின்றதான சத்தியசீலன் மாலினி, தமா தர்ஷிகா, சானுஜா ஆகியோர் (தாய்,பிள்ளைகள்) தேவையான நிதியினை
வழங்கியுள்ளார்கள்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளிற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.ngo
Web. – jeevaootru.ngo