இஸ்லாமிய சகோதரரின் இனம் மதம் கடந்த 04 ஆவது மனித நேயப்பணி
“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (06.04.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை குவைத் தேசத்தில் வாழ்கின்றதான SHERIF KAHN அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
இவர், தங்களின் புனித தினங்களின் ஒன்றான நோம்புகாலத்தில் தங்களை ஒறுப்பதன் மூலம் தினம் தினம் வாழ்வதற்கு அல்லலுறுகின்ற குடும்ப உறவுகளிற்கு வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் உள்ளதான நெடியமடு எனும் கிராமத்தில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 30 குடும்பத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
JEEVAOOTRU trust
Email_contact@jeevaootru.ngo
www.jeevaootru.ngo