மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது
புத்தாண்டிலும் புதிய மாற்றங்களுடன் SQM Foundations இனது நிதி உதவியில் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பயணம் ஆரம்பமாகியது. பெருமைக்காக வாழ்வோர் பலர் இருக்கையில் துன்புறும் மக்களை பெருமைப்படுத்தி வாழ வைக்கவே பிரதேச வேறுபாடுகளை களைந்து இதுவரையில் தன் சொந்த நிதியில் 18 இல்லங்களை நிர்மாணிப்பதற்கான உதவியினை நல்கியவரின் உன்னதமிக்க பங்களிப்பில் பணிகள் ஆரம்பமாகின.
குறிப்பாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளிலும் (11.03.2023) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 85 ஆவது இல்லமும் அதே சமயம் SQM JANITORIAL SERVICES INC AND SQM FOUNDATION CANADA இனது 14 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதூறை எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கான நிதி உதவியினை வழங்கியிருந்தவர் கமலநாதன் பாக்கியராஜா அண்ணா ( SQM Founder ) அவர்கள் ஆவார்.
கமலநாதன் பாக்கியராஜா அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
JEEVAOOTRU trust
Email_info@jeevaootru.org
Web_jeevaootru.org