முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 74 ஆவது இல்லம் பெறுனரிடம் வழங்கப்பட்டது
ஜீவஊற்றுஅன்பின்கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறுநரிடம் வழங்கி வருகின்றோம். அந்தவகையில்,
இன்றைய நாளிலும் (20.01.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது “ஜீவ ஊற்று அன்பின் கரம்” அமைப்பினுடைய 74 ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 58 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் எனும் கிராமத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இல்லத்திற்கான நிதி உதவியினை நியூசிலாந்து தேசத்தில் வாழ்கின்றதான முருகானந்தம் அஸ்மிதா முருகானந்தம் அனாமிகா ஆகியோர் வழங்கியுள்ளார்கள்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளிற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரையிலான காலப்பகுதியில் 11 இல்லங்களை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்கிய நியூசிலாந்து தேசத்தின் செயற்பாட்டாளர் முருகானந்தம் அண்ணா அவர்களுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி.
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org