மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இஸ்லாமிய சகோதரரின் இனம் மதம் கடந்த மனித நேயம். ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (02.02.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை குவைத் தேசத்தில் வாழ்கின்றதான SHERIF KAHN தனது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேத்தில் தளவாய் எனும் கிராமத்தில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 35 குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.