திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 69 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது
ஜீவஊற்று அன்பின் கரத்தினரும் மக்கள் நல்வாழ்வு மையத்தினரும் இணைந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த (16.01.2023) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 88ஆவது இல்லமும் அதே சமயம் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 69 ஆவது இல்லமும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் இல்லமானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரைச்சேனை எனும் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இவ் இல்லத்திற்கான நிதி உதவியினை அமரர் ஸ்ரீரஞ்சினி செல்வராஜா அவர்களின் நினைவாக அவுஸ்திரேலியா தேசத்தில் வாழ்கின்றதான மகள் நிருஜா நீலஹரி வழங்கியுள்ளார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org