திருகோணமலையில் துவரங்காடு கிராமத்தில் 10 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கியமை
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் (18.01.2023) உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை சுவிட்சர்லாந்து தேசத்தை சேர்ந்த அஜந்தன் தனது பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து வழங்கியிருந்தார்.
இவ் உதவியானது திருகோணமலை மாவட்டத்தில் துவரங்காடு கிராமத்தில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 10 குடும்பத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.