முல்லைத்தீவு மாவட்ட முள்ளியவளை பகுதியில் காணியில் விதைப்பதற்கு கச்சான் வழங்கி வைக்கப்பட்டது
நெதர்லாந்து Mission Mail நிறுவனத்தின் நிதி அனுசரனையில் வாழ்வாதார உதவி.
ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக இன்றைய நாளிலும் ( 28.10.2022 ) முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்றதான குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ஒரு ஏக்கர் காணியில் விதைப்பதற்கு தேவையான கச்சான் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் பல்வேறு விதமான இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்பவர்களின் இன்னலை இல்லாதொழிக்க உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
விஷேடமாக “MISSION MAIL” நிறுவனத்தினருக்கு எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் பணிகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.