திருகோணமலை மாவட்ட மூதூர் தங்கநகர் கிராமத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது
“ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மூலம் இன்றைய நாளிலும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இப் பணிக்கான நிதி உதவியை டென்மார்க் தேசத்தில் செயற்படுகின்றதான ரெகோபோத் ஊழியங்கள் வழங்கியிருந்தனர்.
இவ் உதவியானது திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தங்கநகர் கிராமத்தில் வறுமை நிலையில் வாழ்கின்றதான 50 குடும்பத்தினருக்கே வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதே விதமாக அநேகர் தேவையோடு வாழ்கின்றனர். இவர்களின் தேவையை நிறைவேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.