யாழ் பருத்தித்துறை பகுதியில் 75 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும் ஜீவஊற்று அன்பின் கரம் அமைப்பானது அன்பின் இல்லங்களை மிக துரிதமாக அமைத்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில்,
இன்றைய நாளிலும் (10.09.2022) அன்பின் இல்லமானது பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய 75 ஆவது இல்லம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இல்லமானது யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தினை அமைப்பதற்கு தேவையான நிதி உதவியினை சுவிட்சர்லாந்து தேசத்தில் வாழ்கின்றதான ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உறுப்பினர் சகோதரன் றொஷான் வழங்கியிருந்தார்.
இவ் இல்லத்தினை அமைத்துக் கொடுப்பதற்கு சகல விதத்திலும் உதவிய அன்பு உறவுகளுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்வதால் உதவும் உள்ளம் படைத்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் .
நன்றி
அன்பு உறவுகளாகிய நீங்கள் எங்கள் YouTube, Facebook, Website என்பவற்றை பார்வையிட்டு ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது முகநூல் பக்கத்திற்கு செல்ல
எமது இணையத் தளத்தில் பிரவேசிக்க..
www. jeevaootru.org
எமது YouTube தளத்தில் கானொளிகளை பார்வையிட
https://youtube.com/channel/UCvFMUNiNcNSGtHAQP-YsPGA
Email – info@jeevaootru.org
Web. – jeevaootru.org